News
Loading...

அப்பல்லோ சர்வர்களை ஹேக் செய்த LEGION குழு விலை போனது!?…

அப்பல்லோ சர்வர்களை ஹேக் செய்த #LEGION குழு விலை போனது!?…

மீப காலமாக ஊடகங்களில் அதிகமாக பேசப்படுகிற ஒரு தலைப்பு அப்பல்லோ மருத்துவமனை. அதுவும் கடந்த 3 மாத காலமாக அப்பல்லோ மருத்துவமனை ஊடகங்களில் அதிகமாக அடிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திடீர் உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு, 5ஆம் தேதி இரவு உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஜெயலலிதா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் இறந்தது வரை அவரை மன்னார்குடி தரப்பினரை தவிர்த்து வேறு யாரும் சந்திக்க முடியாமல் இருந்தது.

இந்த இடைப்பட்ட 75 நாட்கள் என்ன நடந்தது என்பது…? மன்னார்குடி தரப்புக்கும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மட்டுமே தெரியும்.

இதனால், முதலமைச்சர் மரணம் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன.

மேலும், ஜெயலலிதா இறந்த சில நாட்களில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல்களும், அரசியல் காய்நகர்த்தல்கள் ஆகியவை தமிழகத்தை பரபரப்படைய செய்துள்ளது.

இவை தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதை வலுபெற செய்துள்ளது என்றே கூறலாம். இந்நிலையில்,மக்கள் போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அப்பலோ  மருத்துவமனையின்  பாதுகாப்பு கேமரா பதிவுகளை வெளியிடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறு, பல கேள்விகள் எழுந்த நிலையில், சமீபத்தில் அப்பலோ மருத்துவமனையின் கணினிகள் லெஜ்ஜியன் என்ற ஹேக்கர்கள் குழுவால் ஊடுறுவப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இருப்பினும் , இந்த கணினி ஹேக்கிங் கதையானது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என்று தமிழக அரசியல் அலோசகர்களும், சமூக ஆர்வலர்களும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் பின்னணியில் பெரிய அரசியல் சதி இருப்பதாகவும் , லெஜ்ஜியான் குழு அவர்களிடம் விலைபோனதாகவும், மருத்துவமனை ரகசியங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காரணம், ரகசியங்கள் வெளியானால், பல உண்மைகள் வெளியாகி, மன்னார்குடி தரப்பினரின் கனவை குழிதோண்டி புதைக்கவேண்டி வரும்.
இதில் இருந்து தப்பித்துகொள்ளும் நோக்கில் அப்பலோ மருத்துவமனையும், மன்னார்குடி தரப்பும் இணைந்து தான் இந்த கணினி ஊடுறுவல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுபெற்றுள்ளது.

எது எவ்வாறாக இருந்தாலும், அப்பலோ மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது..? அப்பல்லோ நிர்வாகத்திற்கும், மன்னார்குடி தரப்பினருக்கும் மட்டுமே வெளிச்சம் என்பது நிதர்சனம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...