News
Loading...

எம்.ஜி.ஆரை டூப்ளிகேட் துப்பாக்கியால் சுட்டாராம் எம்.ஆர்.ராதா!

எம்.ஜி.ஆரை டூப்ளிகேட் துப்பாக்கியால் சுட்டாராம் எம்.ஆர்.ராதா!

தராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்பதன் சுருக்கம் தான் எம்.ஆர்.ராதா.

ஜெர்மன் போர்க்கப்பலான எம்டன் சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடி சம்பவங்கள் நிறைய!

எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா என்றும், சிவாஜியை ‘கணேசா என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!

என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர் பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, ‘நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும்’என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறினார்.

திருப்பதி கோயிலுக்கு குண்டு வைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து, அது வெடித்துச் சிறுவிபத்தான சம்பவமும் உண்டு!

எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாக பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது.

‘நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக் கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது? என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!

ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடித்தவர். ‘கீமாயணம் என்று நாடகம் போட்டார்.

ராமன் வேடத்தில் இருக்கும் போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். மனம் புண்படு பவர்கள் யாரும் வர வேண்டாம்’என்று விளம்பரம் கொடுத்தார்!

அவர் வைத்திருந்த இம்பாலாவில் மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

‘நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப்போக முடியும்?  என்று கேட்டார்!

நாடகத்தின் போது செருப்பு, கல், அழு கிய முட்டை வீசப்படுவது வாடிக்கை,  மறு நாள் அவற்றை கண்காட்சியாக வைத்து, ‘நேற்று பேடிகள் விட்டுச் சென்றவை என எழுதிவைப்பார்!

கருணாநிதிக்கு  ‘கலைஞர் என்று பட்டம் கொடுத்தவர்.

”திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதா தான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்!

தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார்.

”போய்ப் படிங்கடா நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா என்பது அவரது அழுத்தமான கருத்து!

விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார்.

‘ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர் அதனால ஏத்துக்கிறேன் என்று அங்கும் கர்ஜித்தார் ராதா!

தமிழினத்துக்குத் துரோகம் செய்கிற வர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடை ய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும் என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்!

இப்படி ஒரு தில்லான, த்ரில்லான நடிகர் இனி எங்கே பிறக்கப்போகிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.