News
Loading...

முதல்வர் ஜெயலலிதா சாகடிக்கப்பட்டார்!!… பிரபல நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்!!…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாகடிக்கப்பட்டார்!!… பிரபல நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்!!…

றைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல் நிலை குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்ற செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இழப்பை தாங்கமுடியாமல் பொதுமக்கள் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே அவருடைய இறப்பில் சந்தேகம் இருப்பதாக பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் பிரபல திரைப்பட நடிகரான மன்சூர் அலிகான் ஜெயலலிதா சாகடிக்கப்பட்டிருக்கிறார் என ஆவேசமாக கூறியுள்ளார்.

அதில், கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் அம்மா கலந்து கொள்கிறார், அதன் பின் அடுத்த நாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.  அதுமட்டுமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்பட வில்லை.  அவர் அப்படி என்ன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதா சசிகலாவால் அடிக்கப்பட்டிருக்கிறார் என கூறப்படுகிறது. சாதாரணமாக சாலை ஓரங்களில் நடக்கும் கொலை குற்றங்கள், சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் நிலையில், பெரிய தலைவர் அவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் எங்கே போனது?  அவற்றை காண்பிக்க வேண்டும், இதற்கு பிரதாப் ரெட்டி கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.

இவை அனைத்திற்கும் காரணம் சசிகலாவாக இருக்கலாம் அல்லது அவர்களது உறவினர்களாக இருக்கலாம், ஏனென்றால் அவர்கள் தான் ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்தது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...