News
Loading...

ஜெயலலிதா இறந்து ஒருமாதம் ஆகி இருக்கலாம் – EX.M.L.A. பகீர் பேட்டி!

ஜெயலலிதா இறந்து ஒருமாதம்  ஆகி இருக்கலாம் – EX.M.L.A. பகீர் பேட்டி!

டித்தட்டு மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசக்கூடியவர் பாலபாரதி. திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்தவர்.

ஜெயலலிதா மரணத்தை மர்ம மரணம் என குறிப்பிடுகிறார். எப்போது பார்த்தாலும் நலம் விசாரிப்பார் ஜெயலலிதா என தொடங்கும் பாலபாரதி அவரது உடலை பார்க்கும் போது ஒரு நாளிற்கு முன்னதாக இறந்ததை போல் இல்லை என்கிறார்.

சாதரண காய்ச்சல் என அப்பல்லோவில் சேர்த்ததற்கு பிறகு எல்லாம் மர்மமாக முடிந்தது என்கிறார்.

ராகுல் காந்தி வந்து சென்றதற்கு பிறகு ஜெயலலிதாவை காண அப்பல்லோ 2 ஆம் தளம் வரை சென்றதாகவும், அங்கு மூத்த அதிகாரி ஒருவர் அம்மா நலமாக இருக்கிறார் என கூறி அனுப்பி வைத்து விட்டதாகவும் குறிப்பிடுகிறார் பாலபாரதி.

“பெண்கள் அரசியலிற்கு வருவதற்கு தூண்டுகோலாய் இருந்தார் ஜெயலலிதா. ஆனால் அவரது இறப்பு அரசியலில் இருக்கும் பெண்களுக்கு பெரும் அச்சத்தை அளித்துள்ளதாக” முடிக்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்