News
Loading...

நான் தான் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா மகள்: சென்னை பிரஸ் கிளப்பில் பரபரப்பு!

நான் தான் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா மகள்: சென்னை பிரஸ் கிளப்பில் பரபரப்பு!

ங்கிருந்து தான் கிளம்புவாங்களோ தெரியலைங்க? நான் தான் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா மகள் என்று ஒரு பெண் சென்னை பிரஸ் கிளப்பில் சொல்ல அது பிரச்னையாகிவிட்டது.

சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்ட வளாகத்தில் பிரஸ் கிளப் உள்ளது.
அங்கு கட்டிட சங்கம் என்கிற பெயரில் பிரஸ் மீட்டுக்காக முறைப்படி அனுமதி பெற்றிருந்தனர். அந்த பிரஸ் மீட்டுக்கு பிரியா மகாலட்சுமி என்ற பெண் வந்திருந்தார்.

அவர் தலைமையில் நடந்த பிரஸ் மீட்டில் திடீரென்று அரசியல் பேசினார் பிரியா மகாலட்சுமி. என்னை தான் அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவுக்கு தகுதி இல்லை.
என்னை யார் என்று நினைத்தீர்கள்? நான் தான் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் மகள். அந்த ரத்த உறவில் அப்பலோ மீது நடவடிக்கை எடுக்கப்போகிறேன்.
என்று பீலாவிட்டுக்கொண்டே போனார்.

இதைகேள்விப்பட்டு பொங்கியெழுந்து அங்கிருந்து அந்த பெண்ணை விரட்டினர்.
இந்த பீலா ப்ரியா பற்றி ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. இவர் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக்கொண்டு பல அ.தி.மு.க.வினரை தனது வலையில் விழவைத்தவர்.

பலவேலைகளை முடித்துக்கொடுக்கிறேன் என்று பணத்தை ஆட்டையை போடும் அந்த பெண்னிடம் அ.தி.மு.க.வின் முக்கியஸ்தர்கள் பலர் செல்வங்களை இழந்தனர். அப்படி ஏற்பட்ட ஒரு பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரை நீண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பென்னாகர காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். ஆன சம்பவமும் உண்டு.

அந்த வகையில் ஃப்ராடு ப்ரியா தன்னை ஜெவின் மகள் என்று பிரஸ்கிளப்பில் சொல்லி மூக்கறுபட்டார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...