News
Loading...

மக்கள் திலகம் எம்ஜிஆரின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


ருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்றால் யார் என்று கேட்பார்கள். ஆனால் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் சிறிய குழந்தைகளுக்கும் கூட தெரியும். ஏழைக் குடும்பத்தல் பிறந்து, நாடகங்களில் நடித்து வந்த எம்ஜிஆர், சதி லீலாவதி படத்தில் திரையில் தோன்றிய பின்னர் அவரது சாதனைகள் வானத்தைத் தொட்டு நின்றன. தாயின் மீது பாசம், குழந்தைகளிடம் அன்பு, முதியோர் ஏழைகளிடம் கருணை, கொள்கையில் உறுதி, குடி, புகைக்கு எதிரான ஒழுக்கம், மனம் கனிந்த காதல் என்று திரைப்படங்கள் வழியாக நல்ல கருத்துகளை மக்களிடம் சொன்ன எம்ஜிஆரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நேசித்தார்கள். அதுவே அவரது அரசியல் வாழ்வுக்கும் அடித்தளமாக அமைந்துவிட்டது. 

அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் தேர்தலில் அடுத்தடுத்து வெற்றிமீது வெற்றிகளையே அடைந்தார். 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் மேலும் இடம்பிடித்தார். 1987ல் இதே நாளில்தான் எம்.ஜி.ஆர். இந்த உலகை விட்டு மறைந்தார். 30 ஆண்டுகளாகிவிட்டபோதிலும், இன்றும் அவர் மக்கள் மனதில் சரித்திர நாயகனாகவே வாழ்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்