News
Loading...

வானில் பறந்துகொண்டே செல்போனில் தொண்டர்களுக்கு உரை நிகழ்த்திய மோடி!

ஹெலிக்காப்டரில் பறந்துகொண்டே செல்போனில் தொண்டர்களுக்கு உரை நிகழ்த்திய மோடி!

ட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள உத்திரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.கவின் பரிவர்த்தன் பொதுக்கூட்டம் பஹ்ரைச் என்ற இடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக லக்னோவில் இருந்து பிரதமர் மோடி ஹெலிக்காப்டரில் புறப்பட்டார்.

ஆனால் ஹெலிக்காப்டர் வந்து சேருவதற்கு வானிலை ஒத்துழைக்கவில்லை. பனிமூட்டம் கடுமையாக இருந்தது.

இதனால் தனது பயணத்தை நடுவானில் மாற்றியமைத்த பிரதமர் மோடி, செல்போன் மூலம் பொதுக் கூட்ட ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு, வானிலை ஒத்துழைக்காததால், லக்னோவிற்கே திரும்பிச் செல்வதாகவும், வானிலை சரியானவுடன் நேரம் இருந்தால் மீண்டும் வருவதாகவும் தெரிவித்தார்.

இதனை பொதுக்கூட்ட நிர்வாகி மைக்கில் தொண்டர்களிடம் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...