News
Loading...

ஜெயலலிதாவின் மரணத்தை முன்கூட்டியே டிவிட் செய்த மோடி?

ஜெயலலிதாவின் மரணத்தை முன்கூட்டியே டிவிட் செய்த மோடி?

வைரலாக பரவி வரும் திடுக் தகவல்கள்! ஜெ,வின் மரணம் பற்றி முன்கூட்டியே மோடி டுவிட் செய்தாரா? என்கிற செய்தியே தற்போது சோஷியல் மீடியாக்களுக்கு தீனி!

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பாகவே இந்திய பிரதமர் மோடி ட்விட் செய்துவிட்டார் என்பதே அவர்களின் செய்தி. அவர் இறக்க போகிறார் என்பது மோடிக்கு முன்கூட்டியே எப்படி தெரியும்? என வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் பலர் சர்ச்சைகளை எழுப்பி வந்தனர்.

இது குறித்து ஆழமாக பார்த்தால் சில உண்மைகள் தெரியும். பொதுவாக, ட்விட் செய்கின்ற பொழுது எந்த நாட்டுடைய நேரத்தில் இருக்கிறீர்கள் என்ற கேள்வி அதில் ஒளிக்கும். ட்விட் செய்பவர்கள் அதற்கான பதிலை பதிவு செய்வார்கள்.

உதாரணத்துக்கு ஜிஎம்டி 05:30 நேரத்தில் இருந்தால் அது இந்திய நேரம் என்று தெரியும்.மற்ற நேரம் காட்டினால்,அது நம் நாட்டுக்கு இணையான வெளிநாட்டு நேரம் கிடைக்கும்.மோடியின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் 5ம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயலலிதாவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

அவரது டிவிட்டை வெளிநாட்டவர் ஒருவர் பார்க்கிற பொழுது அவர் எந்த நாட்டில் இருந்து பார்த்தாரோ அந்த நாட்டின் நேரத்தை காட்டும். அப்படி எடுக்கப்பட்ட டிவிட்டை போட்டோ க்ளிக் செய்து ஜெ,வின் மரணம் மோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்று சோஷியல் மீடியாகளில் பரபரக்கிறார்கள். அடப் பாவிகளா?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...