News
Loading...

மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கை தொடரும் - பிரதமர் நரேந்திர மோடி

மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கை தொடரும் - பிரதமர் நரேந்திர மோடி

மும்பையில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட, ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார். 

பான்வெல் பகுதியில், தேசிய பங்குச்சந்தை கல்வி நிறுவனத்தின் புதிய வளாகத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், நீண்டகால கண்ணோட்டத்துடன் கூடிய கொள்கைகளை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டார். அவை நிலையானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

மூலதனச் சந்தைகள் மீது அதிக அளவு வரி விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நிதிச் சந்தைகள் மூலம் அதிகம் லாபம் அடைவோர், வரிகள் மூலம் தேசத்தின் கட்டமைப்புக்கு பங்களிக்க வேண்டும் என்றார்.

நேற்று மாலை, புனேவில் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய மோடி, நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால், நகர்ப்புறகங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார். 

ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது, பொது மக்களுக்கு குறுகிய காலத்துக்கு வேதனையைத் தந்தாலும், நீண்ட கால பலன்கள் கிடைக்கும் என்றார். முந்தைய ஆட்சியாளர்கள் கறுப்புப் பணத்திற்கு எதிராக கடின முடிவுகளை எடுக்கத் தவறிவிட்டதாகவும் மோடி குற்றம் சாட்டினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்