News
Loading...

மகாராஷ்டிரா: ரூ.35 லட்சம் மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள், 2 கிலோ தங்கம் பறிமுதல்

மகாராஷ்டிரா: ரூ.35 லட்சம் மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள், 2 கிலோ தங்கம் பறிமுதல்

காராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மும்பை அருகே பான்வெல் ((panvel)) பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நவிமும்பை போலீசார், இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி, 2 கிலோ தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்ததாகத் தெரிவித்துள்ள போலீசார், இவற்றை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினர். இதையடுத்து, ரூபாய் நோட்டுகளும், தங்கக்கட்டிகளும் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அவை யாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்