News
Loading...

கேரளாவில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத 12 பேர் கைது

கேரளாவில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத 12 பேர் கைது

கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்காத 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அப்போது தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்காத 12 பேரை அம்மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து திருவனந்தபுரம் போலீஸ் அதிகாரி அனில் குமார் கூறும்போது, "தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்காத 12 பேரை இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் கைது செய்தோம். பின் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள்" என்று கூறினார்.

முன்னதாக நாடு முழுவதும் திரையரங்குகளில் படக் காட்சி திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்