News
Loading...

2016-ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படத்துக்கான விருதை பெற்ற பச்சை பாம்பு..!

2016-ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படத்துக்கான விருதை பெற்ற பச்சை பாம்பு..!

கோ‌‌வையை சேர்ந்த வன உயிரின புகைப்பட ஆர்வலர் வருண் ஆதித்யா. இவர் எடுத்த புகைப்படத்தை 2016-ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படம் என நேஷனல் ஜியோகிராபி அறிவித்துள்ளது. ‌‌

கோவையை சேர்ந்த வன உயிரியியல் புகைப்பட ஆர்வலர் வருண் ஆதித்யா. இவர் எடுத்த பச்சை பாம்பு படத்திற்கு நேஷனல் ஜியோகிராபி முதல் பரிசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து 70 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இப்போட்டியில் ஆதித்யா எடுத்த புகைப்படம் முதல்பரிசை தட்டிச் சென்றது.

சிறு வயதில் முதலே இயற்கை மீதும் பறவைகள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்ட வருண் ஆதித்யா, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்துள்ளார். மேலும் இவர் சிறு வயது முதலே யாஷிகா கேமராவில் இயற்கை படங்களை எடுப்பதையும் தனது வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

இவர் எடுத்துள்ள பச்சை பாம்பு, பெல்காம் பகுதியில் வாழுபவை. 10 அல்லது 12 சென்டி மீட்டர் நீளம் கொண்டது. இந்த படத்தை 10 மீட்டர் தூரத்தில் இருந்தது மேக்ரோ லென்ஸ் மூலம் வருண் ஆதித்யா அழகாக புகைப்படம் எடுத்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்