News
Loading...

நீட் தேர்வு இனி தமிழிலேயே எழுதலாம் : மத்திய அரசு அறிவிப்பு..!

நீட் தேர்வு இனி தமிழிலேயே எழுதலாம் : மத்திய அரசு அறிவிப்பு..!

ருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வை இனிமேல் தமிழிலேயே எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் தேர்வு இது வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால், பல மாநிலங்களில் அவர்களின் தாய் மொழிகளில் படித்த திறமையான மாணவர்களுக்கு கூட மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் நீட் எனப்படும் மருத்துவ இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுகளை தமிழிலேயே எழுத மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கிராமப்புறங்களில் இருந்து தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

மேலும் மருத்துவ இட ஒதுக்கீட்டையும் அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்துக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாமல், குஜராத்தி, வங்காளம், அசாம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நீட் தேர்வை எழுத மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நீண்ட காலமாகவே கிராம பகுதி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் ஆங்கில வழிக்கல்வி மாணவர்கள் மட்டுமே பெரும்பான்மையாக மருத்துவக்கல்லூரிகளில் இடம் பிடித்து வந்தனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் கிராமப்புற மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் கிராமப்புற தமிழ் வழி பயிலும் மாணவ,மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...