News
Loading...

விரைவில் புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

விரைவில் புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும். பழைய ரூபாய் நோட்டுகளைப் போலவே புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள் இருக்கும். தோற்றம் மற்றும் நிறத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

அதேநேரம் பழைய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும்'' என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்தியாவில் தற்போது ரூ.10, 20, 50, 100, 500, 2000 மதிப்பிலான நோட்டுகள் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...