News
Loading...

உதயமாகும் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்!!… சின்னம்மாவுக்கு ஆப்பு ரெடி!!…

உதயமாகும் ”அம்மா திராவிட முன்னேற்ற கழகம்”!!… சின்னம்மாவுக்கு ஆப்பு ரெடி!!…

திமுவின் சீனியர் அமைச்சர் ஒருவர் கூறுகையில் “அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமாக இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் அதிமுகவின் எம்.எல்.ஏ க்கள், அமைச்சர்கள் என்று பல்வேறு நபர்கள் போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை சந்தித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க சொல்லி வற்புறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த வேலையை சசிகலாவின் கணவர் நடராஜன் திட்டமிட்டு பரப்பினார் என்று கூறினார்.

இதில் மேல்மட்ட நபர்கள் தங்கள் பதவியை தக்க வைக்க இப்படி சசிகலாவிடம் சரணடைந்து விடுகிறார்கள். ஆனால், தொண்டர்கள் சசிகலா அந்த பதவிக்கு வருவதை விரும்பவில்லை. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி உருவாகி வருகிறது. இதற்கு தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்” என்றார் அதிமுகவை சேர்ந்த அந்த சீனியர் அமைச்சர் ஒருவர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...