News
Loading...

நொய்டாவில் 11 திருமணம் செய்த பெண் கைது!

நொய்டாவில் 11 திருமணம் செய்த பெண் கைது!

ரியானா மாநிலம், நொய்டாவில் 11 ஆண்களை திருமணம் செய்து, ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

டோலி கி டோலி என்ற இந்தி படத்தில் சோனம் கபூர், தொடர்ச்சியாக ஆண்களை ஏமாற்றும் பெண்ணாக நடித்திருப்பார். இதேபோன்ற சம்பவம் நொய்டாவில் நிகழ்ந்துள்ளது. மேகா பார்கவ் என்ற 28 வயது பெண்ணே இத்தகைய மோசடியை செய்தவர்.

பல்வேறு திருமண இணையதளங்களில் பதிவு செய்துகொண்ட மேகா பார்கவ், வசதியான ஆண்களாகத் தேடித் தேடி 11 பேரை திருமணம் செய்துள்ளார். பின்னர், அவர்களிடம் இருந்து, தங்கம், வெள்ளி நகைகள், பணம் போன்றவற்றை சுருட்டிக் கொண்டு, எஸ்கேப் ஆவது மேகாவின் வழக்கம்.

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட நபர்களில், 4 பேர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுபற்றி விரிவான விசாரணை நடத்திய நொய்டா போலீசார், மேகா பார்கவ்வை இன்று கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

திட்டமிட்டு, இத்தகைய மோசடியை ஒரு குடும்பமே செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்