News
Loading...

கிறிஸ்துமஸ் நெருங்குவதை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்.

கிறிஸ்துமஸ் நெருங்குவதை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், நாகர்கோவிலில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகர்கோயிலில் ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளை, தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் ஆம்னி பேருந்து நிறுவன ஊழியர்கள், பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கூடுதல் கட்டணம் செலுத்தினால் பயணம் மேற்கொள்ளமுடியும் என தெரிவிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

அதாவது, நாகர்கோயிலில் இருந்து குமரிக்கு செல்ல கட்டணம் ஆயிரத்து 175 ரூபாய் என்ற நிலையில், ஆன்லைனில் பதிவு செய்தால், ஆயிரத்து 850 ரூபாய் தருமாறும், இல்லையெனில் பயணம் மேற்கொள்ளமுடியாது என தெரிவிப்பதாகவும் பயணிகள் கூறுகின்றனர். பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமங்களை ரத்து செய்யவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்