News
Loading...

முதல்வர் ஓ.பன்னீரை விரட்டவே ராம மோகன் ராவை பேட்டி கொடுக்க வைத்திருக்கிறார்கள்!!

முதல்வர் ஓ.பன்னீரை விரட்டவே ராம மோகன் ராவை பேட்டி கொடுக்க வைத்திருக்கிறார்கள்!!

த்திய பா.ஜ.க.வின் கைங்கிரியத்தால் முதல்வராக வீற்றிருக்கும் ஓ.பி.எஸ்ஸை பெயர் சொல்லாமல் தனது பேட்டியில் தாக்கியிருக்கிறார் ராமமோகன்ராவ்.

ஜெயலலிதாவையும் கொச்சைபடுத்தி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவப்படை தலைமை செயலகத்தில் என்னுடைய அலுவலகத்தில் நுழைந்ததை மாநில அரசு வேடிக்கை பார்த்தது என்று ஆவேசமாகவும்,

அரசியல் சாசனத்தை மீறியிருக்கிறது என மத்திய அரசை குறைத்து மதிப்பிட்டும் குறிப்பிட்டார்.

பல்வேறு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், நீதிபதிகள் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள வருமான வரித்துறையினர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் வரவே மாட்டார்கள்.

ராமமோகன்ராவ் ரெய்டு விஷயத்தில் சட்டத்தை முறையாக கையாண்டுள்ளனர்.

அதே வேளையில் தலைமைச்செயலாளரின் அலுவலகத்துக்குள் சோதனை செய்ததையோ, பாதுகாப்புக்காக ராணுவத்தினரை அழைத்து சென்றதற்கோ மாநில அரசிடம் அனுமதிகேட்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

தமிழகத்தின் சீனியர் மோஸ்ட் அதிகாரிகளில் ஒருவரான ராமமோகனராவுக்கு இதெல்லாம் தெரியும். அவர் கண் முன்னே எத்தனை ரெய்டு நடந்திருக்கிறது.

ஜெயலலிதா இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா என பேட்டியில் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக எல்லாவற்றையும் உங்களை போன்றவர்களை நம்பிதானே அவுங்க செய்தார்கள்.

ஆக ரெய்டையும், அதன் முறையையும் தவறு என்று சொல்ல முடியாது.

எனக்கு சஸ்பெண்ட் ஆர்டரை கொடுக்கவில்லை என்கிறார். இப்போதும் நான் தான் தலைமைச் செயலாளர் என்கிறார்.

என்ன ஆச்சு அவருக்கு. உங்க பதவிக்கு வேற நபரை போட்டாச்சு. அப்புறம் எப்படி இந்த வார்த்தை.

பஞ்சநாமாவை காண்பித்து இதோ பாருங்க இதுதான் என் சொத்து என்கிறாரே,

ஏன் உன் புள்ளைக்கு கொடுத்த பஞ்சநாமாவை காட்டேன் பார்ப்போம்.

என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு கல் எரிந்திருக்கிறார்

தற்போதைய தமிழக அரசை பற்றி முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் கூறியுள்ள கருத்துக்கு தமிழக அரசின் பதில் என்ன?

முதல்வர் பன்னீர் செல்வத்தின் பதில் என்ன?

அதே போல் மத்திய அரசு பற்றி பேச எங்கிருந்து துணிச்சல் வந்தது அவருக்கு?

இவ்வளவு தைரியமாக மத்திய? மாநில அரசுகளுக்கெதிராக பேசுகிறார் என்றால் அதன் பின்னணி என்ன?

ஆளுநர் நியமித்த புதிய தலைமைச்செயலாளர் பதவியை பொறுப்பு பதவியாக இருக்கலாம் என்கிறார்.

ராமமோகனராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் டிஸ்சார்ஜ் ஆன வரை யார், யார் அவரை சந்தித்தினர்?

தன்னை குறி வைத்ததாக சொல்கிறார், ஆனால் இவர் பேட்டியை பார்த்தால் இவரது குறி ஒ.பி.எஸ்.என்பது போல் தான் உள்ளது!

அதற்கு தூண்டிவிட்டது மன்னார்குடி மைனரா? ஆக இந்த டிராமாவின் அடுத்த கட்டம் என்ன?

அதுதான் உச்சகட்டமோ என்னமோ!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.