News
Loading...

வர்தா புயலுக்கு பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா?

வர்தா புயலுக்கு பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா?

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள வர்தா புயல் தென் ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் இன்று மதியம் கரையை கடக்க உள்ளது.

தற்போது சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் வர்தா புயல் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த புயலுக்கு வர்தா என்ற பெயரினை வைத்தது பாகிஸ்தான். வர்தா என்றால் சிகப்பு ரோஜா என்று அர்த்தம்.

இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் தான் பெயரை தீர்மானம் செய்கின்றன.

கடைசியாக சென்னையை தாக்கிய நடா புயலுக்கு ஓமன் நாடு பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.

புயலெல்லாம் எப்போ எத்தனை மணிக்கு எங்கு கரையைக் கடக்கும்னு படம் போட்டு காட்டும் #Live #weather #map உங்கள் News2.inல்...
http://www.news2.in/p/wind-tv.html (Ctrl + D) Bookmark this page

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்