News
Loading...

நியூஸ்பேப்பரில் பொட்டலம் கட்ட நாடுமுழுவதும் தடை!!

நியூஸ்பேப்பரில் பொட்டலம் கட்ட நாடுமுழுவதும் தடை!!

நாடு முழுவதும் உள்ள ஓட்டல்கள் உள்ளிட்ட உணவகங்களில் உணவுப்பொருட்களை வாங்கும்போது பெரும்பாலும் செய்தித்தாள்களில்தான் மடித்து தருகின்றனர். மிகப்பெரிய ஓட்டல்களில் மட்டும்தான் அதற்கென உருவாக்கப்பட்ட அட்டை பெட்டியில் (பேப்பர் பாக்ஸ்) வைத்துத் தருகின்றனர்.

இந்நிலையில், உணவு பொருட்களை செய்தித்தாள்களில் மடித்துதர நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள்களில் உள்ள மையால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடை உத்தரவு இன்று முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...