News
Loading...

சுற்றுச்சூழலைக் காக்கும் காகித விதைப் பேனா...

சுற்றுச்சூழலைக் காக்கும் காகித விதைப் பேனா...

ள்ளிச் சிறுவர்களிடையே செடிகள் வளர்ப்பையும், சூழல் ஆர்வத்தை யும் வளர்த்தெடுக்கும் விதமாக, விதைகளுடன் கூடிய ‘முளைக்கும் பென்சில்’களை உருவாக்கி வருகின்றனர் கோவையைச் சேர்ந்த 2 பட்ட தாரி இளைஞர்கள்.

சுற்றுச்சூழலைக் காக்கும் காகித விதைப் பேனா...

பந்துமுனைப் பேனா பயன்பாடு அதிகமாகி, அவை பிளாஸ்டிக் குப்பைகளாக சூழலை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளன. கேரளத்தைச் சேர்ந்த லட்சுமிமேனன் என்பவர் இந்த பந்துமுனைப் பேனாக்களில், செடி விதைகளை வைத்து, அதன் மூலமும் சூழலைப் பாதுகாக்கலாம் என்பதை செய்து காட்டினார். அதுபோல, கோவையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கள் ரஞ்சித்குமார், ராஜகமலேஷ் இருவரும், பென்சில்களில், செடி விதைகளை வைத்து முளைக்கும் பென்சில்களை (பார்ம்சில்) உருவாக்கியுள்ளனர்.

வழக்கமான பென்சிலின் பின் புறத்தில் பூ, காய்கறிகளுக்கான விதைகளை வைத்துள்ளனர். பென்சிலின் பயன்பாடு முடிந்ததும், எஞ்சிய பகுதியை மண்ணில் புதைத்து வைத்தால் அதில் இருந்து செடிகள் முளைக்கும் என்பது இதன் நோக்கமாகும். இந்த நோக்கத்தை செயல்படுத்தி ஆண்டுக்கு 2 லட்சம் எண்ணிக்கையில் ‘முளைக்கும் பென்சில்களை’ உருவாக்கி சந்தைப் படுத்தியதோடு, ஏழை, எளிய பெண் களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் இந்த பட்டதாரி இளைஞர்கள்.

குழந்தைகள் மூலம் மாற்றம்

இதுகுறித்து எஸ்.ரஞ்சித்குமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘எனக்கு சொந்த ஊர் மதுரை. நண் பர் ராஜகமலேஷ் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இருவரும் கோவை யில் 2008 - 2012 வரை கணினி பொறி யியல் படித்தோம். அதன்பின் வெவ் வேறு துறைகளில் பயணித்தோம். ஆனால், அதில் உடன்பாடில்லை. பின்னர் இருவரும் இணைந்து, யோசனை செய்தோம். அதில் உருவானதுதான் இந்த ‘முளைக்கும் பென்சில்’ திட்டம்.

சுற்றுச்சூழலைக் காக்கும் காகித விதைப் பேனா...
விதைகளுடன் பென்சில் தயாரிக்கப்படுகிறது. (அடுத்த படம்) ‘முளைக்கும் பென்சில்’ தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

பள்ளிக் குழந்தைகள்தான் அதிக ளவில் பென்சில் பயன்படுத்து வார்கள். அவர்கள் கையில் இந்த பென்சில் கிடைத்தால், எழுதுபொரு ளாக பார்ப்பதை விட, அதனால் ஒரு செடி முளைக்கப் போகிறது என்ற ஆர்வம் குழந்தைகளுக்கு ஏற்படும். அதன்மூலம் சிறு வயதிலேயே அவர்களிடம் மரம், செடி வளர்ப்பை ஊக்குவிக்க முடி யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

பென்சிலில் இருந்து ஒரு செடி உயிர்ப் பெறும்போது, நிச்சயம் பல செடிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்குத் தோன்றும்.

பென்சிலை குழந்தைகள் வாயில் கூட வைக்கக்கூடும். எனவே மாத் திரைகளுக்கான கேப்சூலை பயன் படுத்தாமல், இயற்கை மூலப் பொருளில் தயாரான கேப்சூல்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு உள்ள ஒரே மூலதனம் இங்கு பணிபுரியும் பெண்கள் தான். 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே குடும்பம் போல, குறைந்த வருவாயையும் பொருட்படுத்தாமல் ‘நல்லது செய்கிறோம்’ என உழைக் கிறார்கள். ஒரு பென்சில் ரூ.10-க்கு விற்கிறோம்.

முளைக்கும் திறனுள்ள 4 வகை பூ விதைகள், 4 வகை காய்கறி விதைகளை வாங்கி, தனித்தனி கேப்சூலில், உரம், தென்னைநார் ஆகியவற்றோடு விதைகளை வைத்து பென்சிலுடன் இணைக்கி றோம். பென்சிலோடு ரப்பர், ஷார்ப் னர், பென்சில் பயிரிடுவதற்கான வழிகாட்டி கையேடு, விதைகள் காலாவதியாகும் காலம் ஆகிய வற்றையும் இணைத்துள்ளோம். விதைகள் குறித்த ஆலோ சனையை தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகம் வழங்கி யது. அந்த ஊக்கத்தோடு சூழலிய லுக்கான எங்கள் பங்களிப்பைத் தொடர்ந்து செய்வோம்’ என்றார்.

கேரளா மாநிலம், வைக்கம் பகுதியைச்சேர்ந்த லக்ஷ்மி மேனன் என்பவர் தான் முதன் முதலில் இதனை கண்டுபிடித்தார். அது பற்றிய தகவல் : http://www.news2.in/2016/08/blog-post_11.html

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.