News
Loading...

பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க.. ஜெட்லியின் அதிரடி தள்ளுபடி அறிவிப்புகள்

பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க.. ஜேட்லியின் அதிரடி தள்ளுபடி அறிவிப்புகள்

மின்னணு பரிமாற்றமே நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் இலக்கு எனத் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மின்னணு பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளார்.

ரூ‌பாய் நோட்டு தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டு இன்றோடு ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜேட்லி, ரயில்வே பயணச்சீட்டை மின்னணு முறையில் பதிவு செய்தால் 10 லட்ச ரூபாய் வரை காப்பீடு வசதி பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

புறநகர் ரயில்களில் மின்னணு முறையில் சீசன் டிக்கெட் வாங்கினால் கட்டணத்தில் அரை சதவிகித தள்ளுபடி என ஜேட்லி கூறினார். இது ஜனவரி ஒன்றாம் தேதி அமலுக்கு வரும் என்ற அவர், கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு நபார்டு வங்கி மூலம் ரூபே கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் நிலையங்களில் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் 0.75 சதவிகித தள்ளுபடி பெறலாம் என்ற அருண் ஜேட்லி, சுங்கச் சாவடிகளில் கார்டு பயன்படுத்தினால் அரை சதவிகித கட்டணச் சலுகை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ரயில்வே நிலைய உணவகங்களில் ரொக்கமற்ற பரிவர்த்தனைகளுக்கு 5 சதவிகித தள்ளுபடி வழங்கப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார். 10 ஆயிரம் பேர் மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களுக்கு 2 மின்னணு பரிமாற்ற இயந்திரம் வழங்கப்படும் எனவும், அதற்கென 1 லட்சம் கிராமங்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அருண் ஜேட்லி கூறினார். ரொக்கமற்ற பரிவர்த்தனையே பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பு என்றும் அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.