News
Loading...

ஜனவரி முதல் பெட்ரோல் ரூ.35, டீசல் ரூ.28..!? வைரல் செய்தி..!!

ஜனவரி முதல் பெட்ரோல் ரூ.35, டீசல் ரூ.28..!? வைரல் செய்தி..!!

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, சில்லரைத் தட்டுபாட்டால் நாடுமுழுவதும் மக்கள் தவித்துவருகின்றனர். இதனைத்தொடர்ந்து ரூ.2,000 மட்டுமே ஏடிஎம் மையங்களில் தற்போது எடுத்துவருகின்றனர். அதற்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சில்லரை கிடைப்பதில்லை.

எனவே, சில்லரை தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துவருகிறது. இதனைத்தொடர்ந்து ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை மொபைல் ஆப்ஸ்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், தற்போது பெட்ரோல் ரூ.35, டீசல் ரூ.28, சமையல் காஸ் ரூ.218 மற்றும் பருப்பு வகைகள் ரூ.49 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட மோடி படம் பொறித்த புகைப்படம் தற்போது வாட்ஸ்அப்பில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

தற்போதுள்ள பொதுமக்களின் அசவுகரியமான சூழ்நிலையில் இந்த புகைப்படங்களில் உள்ளதுபோல் விலை குறைந்தால் அதைவிட சந்தோஷம் எதுவும் இல்லை என குறிப்பிடலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்