News
Loading...

ஆறுதல் கூறிய பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுத பன்னீர்செல்வம், சசிகலா..!

ஆறுதல் கூறிய பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுத பன்னீர்செல்வம், சசிகலா..!

பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலாவிடம் ஆறுதல் கூறியபோது அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

ஆறுதல் கூறிய பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுத பன்னீர்செல்வம், சசிகலா..!

சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்காக மக்கள் ஜெயலலிதா உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி டெல்லியிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து ஜெயலலிதா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ஆறுதல் கூறிய பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுத பன்னீர்செல்வம், சசிகலா..!

அஞ்சலி செலுத்திவிட்டு சசிகலாவை நோக்கிச் சென்ற மோடி கண்ணீர் விட்டு அழுத அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர் அருகில் சென்றபோது, கட்டி தழுவி ஆறுதல் கூறினார். 

ஆறுதல் கூறிய பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுத பன்னீர்செல்வம், சசிகலா..!

பிரதமர் மோடி ஆறுதல் கூறிய போது முதலமைச்சர் பன்னீர்செல்வமும், சசிகலாவும் கண்ணீர் விட்டு அழுதனர்.

ஆறுதல் கூறிய பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுத பன்னீர்செல்வம், சசிகலா..!

ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...