News
Loading...

கோயிலுக்குக் கூட்டிச்செல்லும் போக்கிமான்-கோ!

கோயிலுக்குக் கூட்டிச்செல்லும் போக்கிமான்-கோ!

மெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பட்டையக் கிளப்பும் போக்கிமான்-கோ மொபைல் கேம் இன்று இந்தியாவிலும் அறிமுகமாகியுள்ளது.

உலக முழுவதும் கோடிக்கணக்கானவர்களால் டவுண்லோட் செய்யப்பட்ட போக்கிமான்-கோ மொபைல்-கேம் இந்தியாவில் இன்று அறிமுகமாகிவிட்டது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்து நியான்டிக் நிறுவனம் இந்தியாவிலும் போக்கிமான்-கோ கேமை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்கள் ப்ளே ஸ்டோரிலும் ஐபோன் வைத்திருப்பவர்கள் ஐட்யூன்ஸிலும் போக்கிமான்-கோ கேமை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

ஜியோவுடன் கூட்டணி:

போக்கிமானை கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டை தான் இந்த போக்கிமான்-கோ கேம். ரியாலிட்டி கேம் வகையைச் சேர்ந்த போக்கிமான்-கோ கேமில் ஜி.பி.எஸ். பயன்பாடு முக்கியமான பங்கு வகிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், போக்கிமான்-கோவில் ரிலையன்ஸ் ஜியோ கடைகளும் போக்கி ஸ்டாப் (Poké Stop) ஆக இடம்பெறும். மேலும், இந்தியாவில் உள்ள கோயில்களும் போக்கி ஸ்டாப்களாக ஆகியுள்ளன.

நிஜத்தில் உள்ள இடங்களை (இந்தியாவில் கடைகள், கோயில்கள்) இந்த கேம் ஜி.பி.எஸ். மூலம் போக்கி ஸ்டாப் ஆக சுட்டிக்காட்டும். விளையாடுபவர் அந்த இடங்களுக்குச் சென்று போக்கிமானைத் தேட வேண்டும். இப்படி, நிஜத்தையும் விளையாட்டுக்குள் புகுத்தியுள்ளதால் தான் போக்கிமான்-கோ சுவாரஸ்யமானதாக இருக்கிறது. இதைத்தான் ரியாலிட்டி கேம் என்று வகைப்படுத்துகிறார்கள்.

எச்சரிக்கை:

விறுவிறுப்பான இந்த கேமில் விபரீதங்களும் ஏராளமாக நடந்துள்ளன. அமெரிக்காவில் போக்கிமான்-கோ விளையாடுபவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் கூடியதால், குறிப்பிட்ட இடத்தில் திடீரென் கூட்டநெரிசல், போக்குவரத்து தடை போன்றவை நடந்துள்ளன. இந்த கேமுக்கு அடிமைகளான சிலர் நீண்டநாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு போக்கிமான்-கோ விளையாடத் தொடங்கிவிட்டனர். இந்த விளையாட்டினால் பல விபத்துக்கள் நடந்து, உயிரிழப்பு நேர்ந்திருக்கிறது. எனவே, இந்த விளையாட்டைத் தொடங்குவதற்கு முன் இவற்றை பற்றி யோசித்துக்கொள்வது நல்லது.

ஐபோனில் போக்கிமான்-கோ இன்ஸ்டால் செய்ய

ஆண்ட்ராய்ட் மொபைலில் போக்கிமான்-கோ இன்ஸ்டால் செய்ய


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்