News
Loading...

பெண்ணுக்காக காவல் அதிகாரிகள் கட்டிபிடி சண்டை!

பெண்ணுக்காக காவல் அதிகாரிகள் கட்டிபிடி சண்டை!

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி கமிஷனரும், ஆய்வாளரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டனர்.

பலான மேட்டரே இதற்கு காரணம் என்றாலும் அதை அப்படியே திசைதிருப்பிவிட்டிருக்கிறார்கள்.

சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரின் வீட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நண்பர்கள் கொள்ளை அடித்தார்கள்.

இந்த கேஸ் விஷயமாக ஆய்வாளர் செல்லமுத்து சரிவர விசாரிக்கவில்லை என்று உதவி கமிஷனர் சுப்பரமணி கொதிப்படைந்தார்.

நீ உயர் அதிகாரிக்கு தரும் மரியாதை இது தானா என்று சொல்லி ஆய்வாளர் செல்லமுத்து கன்னத்தில் ஒங்கி அறைந்துள்ளார்.

பதிலுக்கு ஆய்வாளர் செல்லமுத்து உதவி கமிஷனரை அடித்ததால் இருவரும் ஒருவரை காவல் நிலையத்தில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.

அங்கு பணியில் இருந்த போலீஸ் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் ஆய்வாளர் ஒரு பெண் காவலரை கரெக்ட் செய்து வைத்திருக்கிறார்.

அதே பார்ட்டியை உதவிகமிஷனரும் பிராக்கெட் போட்டாராம். அதனால் வந்த சண்டைதான் சார் இது என்கிறார்கள் இந்த காட்சியை பார்த்த சில நிருபர்கள்.

இந்த சம்பவத்தால் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பொதுமக்கள் புகார் கொடுக்க முடியாமல் திரும்பி சென்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்