News
Loading...

வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்... பிரதமர் மோடி உறுதி

வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்... பிரதமர் மோடி உறுதி

ங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்‌‌ என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் உரையாற்றினர். அப்போது, புத்தாண்டில் வங்கிச் சேவைகள் சீராகும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவை புதிதாக கட்டமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், ரொக்கமற்ற பரிவர்த்தனையே சிறந்தது என்றும் குறிப்பிட்டார்.வங்கிச் சேவைகள் விரைவில் சீராகும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

ரூபாய் நோட்டு ஒழிப்பால் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நேர்மையானவர்களை அரசு ஊக்குவிக்கும் என்றும், நேர்மையற்றவர்களை அரசு திருத்தும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். காமராஜர் உயிரோடு இருந்திருந்தால், மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை பாராட்டியிருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

புதிய ஆண்டை உத்வேகத்துடன் தொடங்குவோம் என்றும். நாடு முழுவதும் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராயப்படும் என்று குறிப்பிட்டார். அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் பெரிய மனிதர்கள் மற்றும் அதிகாரிகளின் உண்மை முகம் தெரிந்துவிட்டதாகவும் மோடி தெரிவித்தார். கருப்புப் பணத்தை மாற்ற உதவிய வங்கி அதிகாரிகளை விட்டுவைக்க மாட்டோம் என்றும் பிரதமர் எச்சரித்தார்.

காந்தி மறைந்துவிட்டாலும், அவர் காட்டிய வழியில் மக்கள் பயணிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். உண்மை, நேர்மை ‌இருந்தால் வெற்றியும் வளர்ச்சியும் கிடைக்கும்‌ என்று தெரிவித்த மோடி, அரசு எடுத்த நடவடிக்கை வருங்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும் என்று குறிப்பிட்டார். கர்ப்பிணிகளுக்கான சிறப்பு திட்டத்தையும், ஏழைகள் வீடு கட்ட வாங்கும் கடனுக்கு வட்டி சலுகைகள் பற்றிய அறிவிப்பையும் மோடி வெளியிட்டார்.

  • விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்படும்
  • ரூ.9 லட்சம் வரை வீட்டுகடன் பெறுவோருக்கு 4 சதவீதம் மட்டும் வட்டி வசூல் செய்யப்படும்
  • ஏழைகளுக்கு சொந்த வீடு கட்ட புதிய திட்டம் அறிவிப்பு

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்