News
Loading...

பினாமி குயின் சசிகலா - வீடியோ-2 வெளியீடு..!

பினாமி குயின் சசிகலா - வீடியோ-2 வெளியீடு..!

ஜெயலலிதா காலமானதையடுத்து, சசிகலாவின் பினாமி சொத்துக்கள் குறித்து பல்வேறு விவரங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

சமீபத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரனின் சொத்துக்களை மிரட்டி சசிகலா தரப்பில் வாங்கியதாக அவரே பேட்டியும் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது அறப்போர் என்ற அமைப்பு மூலம் சமூகவலைத்தளங்களில் ‘பினாமி குயின் சசிகலா வீடியோ-2’ வெளியிட்டிருக்கிறார்கள்.

அதில், கங்கையமரனின் சொத்துகளை மிரட்டி வாங்கி வைத்துள்ள பையனூர் பங்களாவுக்கு தினந்தோறும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், ஷிப்ட் முறையில் 10 போலீசார் இங்கு ரோந்து செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்