News
Loading...

காலியாக இருக்கும் பெர்த்துகள் : சலுகைக் கட்டணத்தில் அளிக்க ரயில்வே முடிவு..!

"காலியாக இருக்கும் பெர்த்துகள்":சலுகைக் கட்டணத்தில் அளிக்க ரயில்வே முடிவு..!

திவேக சொகுசு ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாமல் காலியாக இருக்கும் பெர்த் பயணச் சீட்டுகளை , 10 சதவீத சலுகைக் கட்டணத்தில் அளிக்க ரயில்வே முடிவெடுத்துள்ளது.

துரந்தோ, ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற அதிவேக ரெயில்களில் சில நேரங்களில் முன்பதிவு செய்யப்படாததால், படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் பயணிகள் யாரும் இன்றி வீணாக செல்கின்றன.இதனால் ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து முன்பதிவு இறுதிப் பட்டியல் ரயில்களில் ஒட்டப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு,காலியாக உள்ள பெர்த் இருக்கைகளுக்கான பயணச்சீட்டை பத்து சதவீத சலுகை விலையில் அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதன்படி இந்த பத்து சதவீத சலுகை பயணச்சீட்டானது, ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக ஐ.ஆர்.சி.டி.சி இணைய தளத்திலும், ரயில் நிலைய கவுண்டர்களிலும் கிடைக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த திட்டமானது சோதனை முறையில் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல்,அடுத்தாண்டு மே 31-ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்