News
Loading...

ராமமோகன்ராவும், அவரது மகனும் பயன்படுத்திய ஏராளமான சொகுசு கார் குவியல்களின் வீடியோ

ராமமோகன்ராவும், அவரது மகனும் பயன்படுத்திய ஏராளமான சொகுசு கார் குவியல்களின் வீடியோ

முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவின் வீடுகளில் கடந்த 21ம் தேதி வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அவரின் மகன் விவேக் வீடு மற்றும் நண்பர்கள் மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். இதில், கட்டுக்கட்டாக பலகோடி புதிய ரூபாய் நோட்டுக்கள், தங்க்கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, ராமமோகன்ராவ், நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது குணமடைந்து நேற்று இரவு அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், அவரது வீட்டில், ராமமோகன்ராவும், அவரது மகனும் பயன்படுத்திய ஏராளமான சொகுசு கார் குவியல்களின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த கார்கள் அனைத்திற்கும் 3666 என்று ஒரே நம்பரில் பதிவு செய்துள்ளனர். இதன் வீடியோ தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...