News
Loading...

பார்லி கஞ்சி செய்முறை

பார்லி கஞ்சி செய்முறை

தேவையானவை: பார்லி அரிசி - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பார்லி அரிசியை வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு, கொதித்ததும் பார்லி ரவையைப் போட்டுக் கொதிக்கவிடவும். வெந்ததும் இறக்கி, உப்பு சேர்த்துப் பருகலாம்.

வேறுமுறை: இரண்டு கப் நீரைக் கொதிக்கவைத்து, பார்லி அரிசியைப் போட்டு 20 நிமிடங்கள் மூடிவைத்து வடிகட்டி, உப்பு சேர்த்துப் பருகலாம். வடிகட்டிய பார்லி அரிசியில், மீண்டும் இரண்டு கப் வெந்நீர் விட்டு, மூடிவைத்து 20 நிமிடங்கள் கழித்து வடிகட்டிப் பருகலாம். இதன் மூலம், ஒரே பார்லி அரிசியை இருமுறை பயன்படுத்தலாம். 

பலன்கள்: கர்ப்பிணிகள் இதைக் குடித்தால், கால் வீக்கம் குறைவதுடன் சிறுநீர் எளிதில் வெளியேறும். இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் நிறைவாக உள்ளதால், எலும்பு உறுதியாகும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும். ஃபோலேட், வைட்டமின் பி6 நிறைவாக உள்ளதால், இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். இதில் உள்ள செலீனியம், கல்லீரல் செயல்திறனை மேம்படுத்தி, புற்றுநோயை ஏற்படுத்தும் சில வகையான நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...