News
Loading...

சென்னைக்கு கப்பல்களில் வந்திறங்கிய நிவாரணப் பொருட்கள்..!!

சென்னைக்கு கப்பல்களில் வந்திறங்கிய நிவாரணப் பொருட்கள்..!!

லத்த சேதத்தை ஏற்படுத்தி சென்னை மக்களை கதிகலங்க வைத்துள்ளது வர்தா புயல். சுமார் 140 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியால் சென்னையில் பல வீடுகளும், கட்டிடக் கண்ணாடி ஜன்னல்களும் சேதமடைந்தன.

இதுதவிர, கார், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவைகள் புயல் காற்றால் தலைகுப்புற கவிழ்க்கப்பட்டது. கவிழ்ந்து கிடந்த பேருந்திலிருந்து ஏராளமானனோரை எந்தவித ஆபத்தின்றி மீட்டது மீட்பு குழுவினர்.

இந்நிலையில், வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க 2 கப்பல்கள் மூலம் நிவாரணப்பொருட்களை அனுப்பியுள்ளது மத்திய அரசு. உணவு, துணி, மருந்துகள் மற்றும் மருத்துவர்களுடன் ஐஎன்எஸ் ஷிவாலிக் மற்றும் கட்மாட் கப்பல்கள் சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

பின்னர், நிவாரணப்பொருட்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. நாளை முதல் நிவாரணப்பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்