News
Loading...

அதிமுக அமைச்சர்கள் மங்குனி அமைச்சர்கள் என்பதை நிறுபித்துவிட்டனர்

அதிமுக அமைச்சர்கள் மங்குனி அமைச்சர்கள் என்பதை நிறுபித்துவிட்டனர்

ஜெயலலிதாவை ஏமாற்றுவதே உங்க லட்சியமா? என்று கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் குமுறுகிறார்கள்.

அ.தி.மு.க. வில் நடந்த செட்டப் பொதுக்குழுவில் தொண்டர்களுக்கு ஐஸ் வைக்கிற மாதிரி சில தீர்மானங்களை கொண்டு வந்து அதை நிறைவேற்றினார்கள்.

ஜெயலலிதாவை புகழ்ந்தாலே போதும், தொண்டர்கள் ஜில் ஆகிவிடுவார்கள் என்று திருட்டு கணக்கு போட்டார்களே தவிர, அவர்களுக்கு நல்ல எண்ணம் இல்லை.

அதற்கு சான்றுதான் தீர்மானம் எண் 11. அந்த தீர்மானத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நோபல் பரிசு வழங்க ஏற்பாடு செய்தல் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதை பார்த்த சில தொண்டு நிறுவனங்கள் எந்த முட்டாள் இதை போட்டதுங்க.

உயிரோடு இருக்கறவங்களுக்கு மட்டும்தான் நோபல் பரிசு வழங்கப்படும். ஒருவேளை பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டால் பரிசு உண்டு.

ஆனால் இறந்து போனவர்களுக்கு கண்டிப்பா நோபல் பரிசு வழங்குவதில்லை என்று அந்த அமைப்பு சட்டம் வகுத்துள்ளது என்கிறார்கள்.

அதைக்கூட தெரிந்து கொள்ளாமல் மறைந்த எங்க தலைவியை எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க சார்.

நோபல் பரிசு என்ன அ.தி.மு.க.வின் கட்சி பதவியா?100 ஜால்ராக்களை வளைத்து போட்டு அபகரிக்க?

அடப்போங்கடா நீங்களும் உங்க தீர்மானமும் என்று தொண்டர்கள் கொதிக்கிறார்கள்.

அதிமுக அமைச்சர்கள் மங்குனி அமைச்சர்கள் என்பதை நிறுபித்துவிட்டனர்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினம் என்று அறிவிக்கப்பட வேண்டும் என அ.தி.மு.க.பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கு. எண் 9-ல்

இது அறியாமையால் உருவாக்கப்பட்ட தீர்மானம்.

ஏனென்றால், முன்னாள் இந்திய பிரதமர் சரண்சிங் அவர்களுடைய பிறந்த டிசம்பர் 23 ஆம் தேதியை தேசிய விவசாயிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக அமைச்சர்கள் மங்குனி அமைச்சர்கள் என்பதை நிறுபித்துவிட்டனர்

அவரது பெயரில் ஏற்கனவே தேசிய விவசாயிகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதே பெயரில் கடைப்பிடிக்க வலியுறுத்தி அ.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சிய அடைந்துள்ளனர்.

துதி பாடிகளின் அவசரகதி செயல், அம்மாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளதே என்று பலரும் வருந்துகிறார்கள்.

 உங்க பதவியை தக்க வைக்கிறதுக்கு எங்கம்மா பெயரை  கெடுக்காதீர்கள் என்று தொண்டர்கள் கொட்டி தீர்க்கிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...