News
Loading...

5 வது தீர்மானபடி சசிகலா பொதுச்செயலாளர்!

5 வது தீர்மானபடி சசிகலா பொதுச்செயலாளர்!

அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை அக்கட்சியின் விதிமுறைகளை மேற்கோல் காட்டி கைபற்றியிருக்கிறார் சசிகலா?

தொண்டர்களின் எண்ணம் அதுவல்ல என்று கொக்கரித்து எந்த பிரயோஜன்முமில்லாமல் போனது.

செயற்குழு பொதுக்குழு கூடியதும் மேடையில் செங்கோட்டையன் மதுசூதனன், எடப்பாடி பழனிச்சாமி, பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் என்று ஏராளமான தலைகள் அமரவைக்கப்பட்டிருந்தனர். அனைவரும் முகத்திலும் ஒரு சோகம்.

அவர்களின் இதயத்தின் எண்ணத்தை முகம் காட்டிக் கொடுத்தது.

தீர்மானத்தை முன்கூட்டியே பிரிண்டிங் செய்து அதை வாசித்தார் மதுசூதனன்.

மொத்தம் 14 தீர்மானம் . அதில் 5 வது தீர்மானத்தில் அக்கட்சியின் அமைப்பு விதிகளின்படி விதி 19 பிரிவு 8ல் உள்ளது போல் என்றும் விதி 20 பிரிவு 2 ன் படி வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

பல்வேறு தரப்பில் எழுந்த விமர்சனங்களை கடந்து இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்துக்கு சசிகலா வரவில்லை. இருந்த போதும் சசிகலாவின் தலைமையில் கட்சி பணியாற்ற வேண்டும் என்றும் தீர்மானத்தில் உள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...