News
Loading...

டீக்கடைகாரர் வீட்டில் ரூ.400 கோடி பறிமுதல்! டெய்லர் வீட்டில் ரூ.30 லட்சம், 2.5 கிலோ தங்கம் பறிமுதல்!

டீக்கடைகாரர் வீட்டில் ரூ.400 கோடி பறிமுதல்! டெய்லர் வீட்டில் ரூ.30 லட்சம் , 2.5 கிலோ தங்கம் பறிமுதல்!

பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. பழைய ரூபாய் நோட்டுக்கள் அளவிற்கு புதிய நோட்டுக்கள் அச்சடிக்கப்படாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து விட்டார். டிஜிட்டலுக்கு மாற வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டார்.

அதே நேரம் நாடுமுழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் கிஷோர் பைஜ்யவாலா என்பவர் வீட்டில் பணம், தங்க கட்டிகள், நகைகள், சொத்து பத்திரங்களை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ. 400 கோடி ஆகும். இவர் டீக்கடை வைத்திருந்தவர் ஆவார். பின்னர் பைனான்சியராக மாறினார்.

இதே போல் டெய்லர் ஒருவரின் மொகாலி மற்றும் சண்டிகர் இல்லத்தில் 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2.5 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் 18 லட்சம் ரூபாய் புதிய ரூபாய் நோட்டுக்கள் ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...