News
Loading...

91 பேருடன் புறப்பட்ட ரஷ்ய விமானம் கருங்கடலில் விழுந்தது !

91 பேருடன் புறப்பட்ட ரஷ்ய விமானம் கருங்கடலில் விழுந்தது !

ஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து இன்று அந்நாட்டு நேரப்படி அதிகாலை ஐந்து 20 மணிக்கு TU 154 ரக ராணுவ விமானம் சிரியாவின் லடாக்யா நகர் நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட 20 நிமிடங்களில் கருங்கடலின் மேலே பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்துடனான தகவல் தொடர்பை ரஷ்ய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் இழந்தது. மேலும் அருகில் உள்ள விமான நிலையங்களின் ரேடார்கள் மூலமும் ராணுவ விமானத்தை கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில், மாயமான ரஷ்ய ராணுவ விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. விமானத்தில் பயணித்த 91 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. இதனிடையே மீட்பு பணி ரஷ்ய விமானப்படை மற்றும் கடற்படையால் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

விமானம் சிரியாவுக்கு எதற்காக சென்றது, விமானத்தில் இருந்தவர்கள் யார் என்கிற தகவலை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டாலும், ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த இசைக்கலைஞர்களும், செய்தியாளர்கள் என 91 பேர் விமானத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...