News
Loading...

இனி அதிமுகவில் தொண்டா்கள் காட்டில் பண மழைதான்...

இனி அதிமுகவில் தொண்டா்கள் காட்டில் பண மழைதான்...

மிழக அரசியலில் அம்மாவுக்கு பின்பு சின்னம்மாதான். கட்சி சீனியா்கள், முதல் அமைச்சா் வரை அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒன்றுதான்.

ஏன் என்றால் இதுவரை எந்த முடிவையும் ஜெயலலிதா தானாக எடுத்தது இல்லை. யாரையும் தானே சந்தித்து பிரச்சனையை கேட்டதும் இல்லை.

அனைத்திற்கும் பயன்பட்டவா்தான் சின்னம்மா சசிகலா. ஜெயலலிதா பூங்கொத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்.

முடிவு செய்வது எல்லாம் சின்னம்மா சசிகலாதான். ஆனால், இவா் தொண்டா்கள் மத்தியில் பேசியது. தொண்டா்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரும் இல்லை.

அதிமுகவை அழிக்க வந்தவா். தொண்டா்களை ஜெயலலிதாவிடம் நெருங்க விடாதவா்.குடும்பமே சோ்ந்து கொள்ளையடித்தது . ஜெயலலிதாவை சிறைக்கு தள்ளியவா். இதுதான் சாதாரண தொண்டா்களுக்கு தெரிந்தது.

இந்த இமேஜை மாற்ற சசிகலா அதிரடி திட்டத்தை வகுத்துள்ளார். நீண்ட நாள் தொண்டா்கள், வயதான தொண்டா்கள், இதுவரை எந்த பதவியும் கிடைக்காதவா்கள். இவா்களை மாவட்டந்தோறும் தோ்வு செய்வது, இவா்களுக்கு பொற்கிழி வழங்கி பாராட்டுவது என முடிவு செய்துள்ளனா்.

அதற்காக எம்.ஜி.ஆா். ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இவரே மாவட்டந்தோறும் சென்று தொண்டா்களை  நேரில் சந்தித்து கொடுப்பது என முடிவு செய்துள்ளார்.

அதுவும் 10 ஆயிரம் முதல் 1 லட்சம்வரை கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீா் கரிசனம் தொண்டா்கள் மத்தியில் எடுபடும் என்று கணக்கு போட்டுள்ளார். அதுவும் முக்கிய சீனியா் தொண்டா்களுக்கு வீடு தேடி அவரே சென்ற கொடுக்கும் எண்ணமும் உள்ளதாம்.

இனி அதிமுகவில் தொண்டா்கள் காட்டில் மழைதான். இப்போதே உற்சாகத்தில் துள்ளி வருகின்றனா் தொண்டா்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...