News
Loading...

ஜெ., இடத்தில் சசி…! சசி இடத்திற்கு..?! கட்டி புரண்ட உறவுகள்..!!

ஜெ., இடத்தில் சசி…! சசி இடத்திற்கு..?! கட்டி புரண்ட உறவுகள்..!!

ஜெயலலிதா மறைந்ததும், அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலை சுற்றி, சசிகலாவின் உறவினர்கள் நின்றனர்.

இவா்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு போயஸ் கார்டனில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டவா்கள்.

இந்த சம்பவம் கட்சியினா் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சசிகலா இவா்கள் அனைவரையும் கார்டன் பக்கம் தலை நீட்ட வேண்டாம் என்று கூறியிருந்தார்.

அண்ணன் மகன் தினகரன் சசிகலாவை பொது செயலாளராக கொண்டு வருவதற்கு மாவட்டம் தோறும் சென்று, அந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி தீா்மானம் போடவைக்கும் பணியை செய்து வந்தார்.

இதே நேரத்தில் சகோதரியின் மகன் திவாகரனோ நான்தான் சசிகலா இடத்திற்கு வந்துள்ளேன். அந்த காலம் முதல் பாதுகாப்பு கொடுத்து வருவது நான்தான், என் பேச்சைதான் அனைவரும் கேட்க வேண்டும் என்று கூறிவந்தாராம். அதே நேரத்தில் காவல்துறை உள்ளிட்ட உயா் அதிகாரிகளிடம் இதையே சொல்லி என்ன வேண்டுமானாலும என்னை தொடா்பு கொள்ளுங்கள் என்றாராம்.

இந்த தகவல் தினகரனின் காதுக்கு எட்டியது. நேற்று முன்தினம் சசிகலா முன்பு இருவரும் ஒருவரை ஒருவா் குறைச் சொல்லி திட்டிக் கொண்டனா். சிறிது நேரத்தில் கைகலப்பானது. ஒருவரை ஒருவா் கும்மாங்குத்து, குத்தி தாக்கிக் கொண்டனா். தரையில் விழுந்து புரண்டு சண்டையிட்டனராம்.

இருவரையும் சமாதானம் செய்த சசிகலா, தினகரனை தோட்டத்தில் இருக்க சொன்னார். பிறகு பேசிக்கொள்ளலாம் என்று திவாகரன் ஊருக்கு அனுப்பிவைத்தார். சசிகலா பொது செயலாளராக வேண்டும் என்று பொதுக்குழு தீா்மானம் நிறைவேற்றி விட்டது.

சில தினங்களில் அவா் பொதுச் செயலாளராக பதவியும் ஏற்க உள்ளார். இந்த நிலையில் இனி இந்த குடும்பம் என்னென்ன ஆட்டம் எல்லாம் போடபோகுதோ என்று அச்சத்தில் அதிமுகவினா் உள்ளனா்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...