News
Loading...

சசிகலாவின் மாஸ்டர் பிளான்…! பேரம் பேசும் நிர்வாகிகள்…!! ஜாதிக்கு ஒரு பதவியா?

சசிகலாவின் மாஸ்டர் பிளான்…! பேரம் பேசும் நிர்வாகிகள்…!! அம்மாடியோவ் இது என்ன திட்டம்…!!! ஜாதிக்கு ஒரு பதவியா?

மிழகத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த கட்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன. அரசியலில் சமூகம் சார்ந்த பிரதிநிதித்துவம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் கட்சியில் பலவிதமான பதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு மறைமுகமாக கட்சிக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரா அல்லது சசிகலாவா என்பதில் கட்சிக்குள் கடுமையான குழப்பம் நடந்து வருகிறது.

யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தபோது சசிகலாவை பொறுப்பேற்க அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கேட்டு வரகின்றனர்.

இந்த திடீர் அறிக்கையின் பின்னணியில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் பேரம் பேசியதாக தெரிய வருகிறது.

அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவியும், ஒவ்வொரு மாவட்டத்திலும், எந்த சமூகத்தினர் அதிகமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு கட்சி பதவியும் என்று சசிகலா பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பேரத்தில் மயங்கிய அதிமுகவின் நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சசிகலாவிற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்று பேசப்படுகிறது.

ஆனால், தொண்டர்களோ அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வருவதாகவும் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...