News
Loading...

பொதுக்குழுவுக்கு சசி ஏன் வரவில்லை.. நினைத்தபடியே காய்களை நகர்த்தி வரும் சசிகலா

பொதுக்குழுவுக்கு சசி ஏன் வரவில்லை.. நினைத்தபடியே காய்களை நகர்த்தி வரும் சசிகலா..

ஜெயலலிதா இறந்த பிறகு முதல் முறையாக இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொது செயலாளராக பதவியை ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் சசிகலாவுக்கு ஒருமித்த ஆதரவு தெரிவித்தே தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் சசிகலா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

நிர்வாகிகள் 99 சதவீதம் ஆதரவு தெரிவித்தாலும், 90 சதவீதம் தொண்டர்கள் இடையே இன்னும் சசிகலாவுக்கு ஆதரவு இல்லை. எதிர்ப்பு மட்டுமே உள்ளது. இந்த எதிர்ப்பு இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் எதிரொலித்தால் அது தனக்கு பாதகமாகி விடும் என்று சசிகலா தரப்பினர் அஞ்சினர். எனவே இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் சசிகலா பங்கேற்கவில்லை.

எனவே தீர்மானம் நிறைவேற்றி வேண்டுகோள் தீர்மானத்தை அளித்தவுடன் பங்கேற்றால் அது பெரும் பலமாக இருக்கும். அதன்படியே முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட 5 பேர் போயஸ் இல்லத்திற்கு சென்று தீர்மான நகலை சசிகலாவிடம் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து என்ன செய்யலாம் என முடிவு எடுப்பார். அதாவது அவர் திட்டம் என்னவென்றால் அவராகவே பொறுப்பை பறித்தது போல இருக்க கூடாது. அனைவரும் வற்புறுத்தி பதவி ஏற்றது போல இருக்க வேண்டும் என்ற நிகழ்வை உருவாக்க வேண்டும் நினைத்துள்ளார். அதன்படியே காட்சிகள் நடந்து வருகிறது.

பொதுக்குழுவில் ஏதேனும் எதிர்ப்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவுமே, வீட்டில் இருந்தே பொதுக்குழுவை கண்காணித்து உள்ளார் என கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...