News
Loading...

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா இன்று பதவியேற்கிறார்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா இன்று பதவியேற்கிறார்!

சென்னை வானகரத்தில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலாவை, அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் சசிகலா இன்று காலை 11.30 மணிக்கு பொதுச்செயலாளராக பொறுப்பேற்க உள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், அ.தி.மு.க. சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

இதையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் இருந்து அ.தி.மு.க. தலைமையகம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் பேரிகார்டு அமைத்து ஒரு அடிக்கு ஒரு போலீஸ் என்ற வீதத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்