News
Loading...

சசிகலா தலைமை ஏற்றால் அதிமுக அழியும்..! ஆடிட்டர் பகிரங்க குற்றச்சாட்டு..!

சசிகலா தலைமை ஏற்றால் அதிமுக அழியும்..! ஆடிட்டர் பகிரங்க குற்றச்சாட்டு..!

ணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வளைக்கப்பட்டதில், சசிகலா உள்பட மூத்த அமைச்சர்கள் சிலர் அதிர்ந்து போனதாக தெரிகிறது.

கடந்த மூன்று நாட்களாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக கார்டனுக்குள் நடந்து வந்த பரிவர்த்தனைகளைத்தான் அலசி வருகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் ரெய்டு நடவடிக்கைகள் பாயலாம் என்றும் கூறப்படுகிறது.

யாரையும் விட்டு வைக்க வேண்டாம். முழு அதிகாரத்தையும் பயன்படுத்துங்கள். சரியான ஆதாரம் சிக்கினால் கார்டனை நோக்கிச் செல்லுங்கள்’ என்று மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போயஸ் கார்டன் நடவடிக்கைகளை முடக்கும் விதமாகவே அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போது சசிகலாவுக்கு கூடுதல் தலைவலியாக இருப்பது ஆடிட்டர் குருமூர்த்தியின் அதிரடிகள்தான். சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றால், அ.தி.மு.க அழிந்துவிடும் என பகிரங்கமாக பேசி வருகிறார் அவர்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் ஊழல்களைத் தட்டிக் கேட்க அவர் தயங்கியதில்லை. தற்போது சசிகலாவுக்கு எதிராக அவர் பேசும் அதிரடிகளை, எதிர்கொள்ள வழிதெரியாமல் கார்டன் வட்டாரத்தில் உள்ளவர்கள் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

முதல்வருக்கும் சசிகலா உறவினர்களுக்கும் உள்ள இடைவெளியையும் அவர்கள் கவனித்து வருகிறார்கள். முதல்வர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்ஸை அவ்வளவு எளிதாக அகற்றிவிட முடியாது. அவரே பதவியில் தொடர்வார். தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் எதிர்ப்புகளையெல்லாம் டெல்லி தலைமை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை” என்கின்றனர் பா.ஜ.க பிரமுகர்கள் சிலர்.

இப்போது கிடைத்துள்ள வாய்ப்பு மீண்டும் ஒருமுறை வந்துவிடாது. சின்னம்மா விரைவில் முதல்வர் ஆக வேண்டும்’ என கோட்டையை நோக்கி மன்னார்குடி உறவுகளின் பார்வை பதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவ்வளவு எளிதில் பதவியை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இருவருக்கும் இடையில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க தயாராகவே காத்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்றும் தெரியாமல் முழித்து கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்