News
Loading...

சசிகலாவிற்கு கல்யாணம் பண்ணி வைத்தவர் கருணாநிதி! படிப்பு 10 ஆம் வகுப்பு!

சசிகலாவிற்கு கல்யாணம் பண்ணி வைத்தவர் கருணாநிதி!  படிப்பு 10 ஆம் வகுப்பு!

திமுகவின் அதிகாரம் மிக்க பதவியில் அமர தயாராகி உள்ளார் சசிகலா. இவரைபற்றி சுவாரஸ்யமான சில தகவல்கள் உள்ளன. சசிக்கலாவின் தந்தை “இங்கிலீஸ் மருந்துக்கடைக்காரர் விவேகானந்தன்.” அவருடைய 6 குழந்தைகளில் 5வது குழந்தை சசிக்கலா.

மன்னார்குடியில் உள்ள பின்லே’ போர்டு ஹை ஸ்கூல் என்ற புகழ்பெற்ற பள்ளியில் படித்தவர். ஆனால் 10 வகுப்பு வரை தான். படிக்கும் போது ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம். திருமண வயதை அடைந்த சசிக்கலாவிற்கு விளார் என்ற ஊரில் மாப்பிள்ளை பார்த்தனர். அவர் தான் நடராஜன்.

திராவிட இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர். அதன் கொள்கைகளில் ஊறியவர். மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு திமுக ஆட்சியில் மக்கள் செய்தித் தொடர்புத்துறையில் வேலைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அதன்படி நடராஜனுக்கு வேலை கிடைத்தது. சசிக்கலா நடராஜன் திருமணத்தை தஞ்சை மாவட்ட திமுக நிர்வாகி தலைமையில் கருணாநிதி நடத்தி வைத்தார்.  கருணாநிதிக்கு எதிரான அணியில் சசிக்கலா பல ஆண்டுகள் இருந்த நிலையில் தற்போது அந்த அணிக்கு தலைமை ஏற்றது தான் ஆச்சர்யம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்