News
Loading...

ஜெவின் தோழி சசிகலா…வாழ்க்கை சினிமாவாகிறது…சர்ச்சை இயக்குனர் தகவல்…பரபரப்பு!

ஜெவின் தோழி சசிகலா…வாழ்க்கை சினிமாவாகிறது…சர்ச்சை இயக்குனர் தகவல்…பரபரப்பு!

ந்தியா முழுக்க தன் படங்களால் மட்டுமல்ல…தன் துடுக்குத்தனத்தினாலும் பேமஸ் ஆனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் இந்திய அளவில் …ஏன்…உலக அளவில் ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தால்…அதை ஒட்டி தன் கருத்துக்களை சர்ச்சையான விதத்தில் ட்விட்டரில் பதிவு செய்து …கவிதை ஈர்ப்பது அவரின் வாடிக்கை.

அப்படிப்பட்டவர், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைவையும்,அது தொடர்பான அரசியலையும் விட்டு வைப்பாரா?

இப்போது ஒரு ட்வீட் போட்டு உள்ளார். சசிகலா என்ற டைட்டிலை பதிவு செய்து உள்ளேன். அரசியல் ரீதியான கற்பனை கதை அந்த படம்” என்று.

அப்படியானால்…ராம்கோபால் வர்மா, சின்னம்மா என்று அழைக்கப் படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கதையை எடுக்கப்போகிறாரா? என்றால்… அப்படித்தான் என்று அவரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்