தமிழக அரசியலில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. அதை உறுதி செய்யும் விதமாக உளவுத்துறையில் ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த ராஜேந்திரன் திடீர் மாற்றம் செய்யப்பட்டு வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதில் என்ன சசிகலா ஆதிக்கம் என்று எண்ணுகிறீர்களா.. இனிமேல்தான் விஷயமே ஆரம்பம். உளவுத்துறைக்கு புதிய ஏ.டி.எஸ்.பி நியமிக்கப்பட்டுள்ளாராம். இதுவும் ஒன்றும் புதிது இல்லையே. ஒருவர் மாற்றப்பட்டால், புதியவர் வந்து தானே ஆக வேண்டும் என்கிறீர்களா..?
உளவுத்துறைக்கு புதிதாக வந்திருப்பவர் வேறு யாரும் இல்லையாம்.. திவாகரனின் உறவினரான ஜெயச்சந்திரன் என்பவராம். இப்ப தெரியுதா.. சசிகலாவின் ஆதிக்கம் எப்படி கொண்டு செலுத்தப்படுகிறதென்று..?
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்