News
Loading...

சசிகலாவிற்கு தீவிர பேச்சு பயிற்சி!

சசிகலாவிற்கு தீவிர பேச்சு பயிற்சி!

ரு வழியாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் சசிகலா. அவர் தனது ஆளுமையை நிரூபித்தால் மட்டுமே சர்வைவ் செய்ய முடியும்.

ஆளுமையை நிரூபிக்க முதலில் மக்களிடம் அல்லது ஊடகங்களிடம் நான்கு வார்த்தையாவது உற்சாகத்தை தூண்டும் வகையில் பேச வேண்டும். பேசாமல் என்ன அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் அது மக்களிடம் ஒரு குறையாகவே தெரியும்.

இப்படியெல்லாம் நடராஜனிடம் விசயம் தெரிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்களாம்.

எனவே அவருக்கு பேச்சு பயிற்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது என கூறப்படுகிறது. ஜெயலலிதா கூட ஒரு காலத்தில் பெரிய பேச்சாளராக இருக்கவில்லை.

பின்னர் அவர் அதனை வளர்த்துக் கொண்டார். அதுபோல சசிகலாவையும் சராசரி பேச்சாளராகவாவது உருவாக்க வேண்டும் என நடராஜன் முடிவு செய்துள்ளாராம்.

அதே போல் அவரது இமேஜை உயர்த்த தனியார் நிறுவனங்களை நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் இமேஜை உயர்த்த Soho Square, Ogilvy and Mather ஆகிய தனியார் விளம்பர ஏஜென்சிகள் பயன்படுத்தப்பட்டன.

அதே போன்று ஒரு ஏஜென்சியிடம் ஒப்பந்தம் போடப்படலாம் என தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்