News
Loading...

சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவில் சேர்ந்த அதிமுகவினர்

சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவில் சேர்ந்த அதிமுகவினர்

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆரப்பள்ளம் ஊராட்சி நரிமுடுக்கு கிராமத்தில் உள்ள அதிமுகவினர் 42 பேர், ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு சசிகலா முன்னி றுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவில் இருந்து விலகினர்.

மதியழகன் என்பவரது தலைமையில் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் சாமிதுரை, பிரதிநிதி கணேசன் உள்ளிட்ட 42 பேர், நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன் தலைமையில், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் முன்னிலையில் நேற்று கொள்ளிடத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நிவேதாமுருகன், “அதிமுகவின் தற்போதைய போக்குப் பிடிக்காத அக்கட்சியின் உண்மை யான தொண்டர்கள் பலரும் அக்கட்சியிலிருந்து விலகத் தயாராக உள்ளனர். அவர்களை தாய்க் கழகமான திமுக வரவேற்கிறது” என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...