News
Loading...

குடியரசுத் தலைவர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம்.

குடியரசுத் தலைவர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம்.

றைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் விமானப் பயணத்தில் ஏற்பட்ட இடையூறுக்கு மத்தியிலும் சென்னைக்கு வந்து தமக்கும் தமிழக மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். 

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் துயரமான தருணத்தில் பிரதமரின் வருகை பெரும் ஆறுதலாக அமைந்ததாகவும் துயரத்தை பகிர்ந்துகொண்டமைக்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தனிப்பட்ட முறையில் தனக்கும், தமிழக மக்களுக்கும் ஆறுதல் கூறியதற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவரது ஆறுதல் வார்த்தைகள் தெம்பை அளித்ததாக சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்