News
Loading...

பொதுச்செயலாளர் அல்ல… அதிமுகவின் தலைவர் ஆகிறார் சசிகலா?

பொதுச்செயலாளர் அல்ல… அதிமுகவின் தலைவர் ஆகிறார் சசிகலா? சம்மதித்தார் பன்னீர் செல்வம்?

திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதாக மின்னம்பலம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஓ.பி.எஸ். சசிகலா பார்க்கச் சென்றபோது நடைபெற்ற விசயங்கள் என சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதாவது  கட்சியின் பொதுச்செயலாளருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தலைவருக்கு கொடுக்கப்படுகிறதாம். திமுகவைப் போல. அதிமுகவில் தலைவர் என்று தற்போது யாரும் இல்லை. அவைத் தலைவராக மதுசூதனன் இருக்கிறார்.

அவருக்கு வேறு பதவி வழங்கப்படுகிறதாம். அக்கா வகித்த பொதுச்செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் என கூறிவிட்டாராம் சசிகலா. துணைப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படுகிறாராம்.

செங்கோட்டையனுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படுகிறதாம். இந்த அத்தனை முடிவுகளும் சசிகலா தரப்பில் முன்மொழியப்பட்டதாம். இதற்கு தலையாட்டி சம்மதித்தாராம் ஓ.பன்னீர் செல்வம்.

தொடர்ந்து முதலமைச்சராக நீங்களே இருந்து கொள்ளுங்கள் என சசிகலா கூறிவிட்டாராம். இந்த அதிரடி முடிவுகள் கட்சியின் பொதுக்குழுவின்போதோ, அல்லது அதற்கு முன்பாகவே அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...