News
Loading...

சசிகலா நடராஜன் மோசடிக்காரர் நம்பாதீங்க! ஜெ., வின் அறிக்கையும் விமர்சனமும்!

சசிகலா நடராஜன் மோசடிக்காரர் நம்பாதீங்க! ஜெ., வின் அறிக்கையும் விமர்சனமும்!

ஜெயலலிதா அறிக்கை : 

துவரை நான் சந்தித்த ஒவ்வொரு தேர்தலின் போதும், நடராஜன் குறித்து நான் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியத்தையும் கட்டாயத்தையும் ஏற்படுத்தி வந்துள்ளார். இத்தேர்தல் நடைபெறும் போது திருந்தி இருப்பார் என்று நம்பினேன். அவரது போக்கில் மாற்றம் தென்படவில்லை.

எனக்கு தேர்தலுக்கு தேர்தல் உறுதுணையாக இருப்பார் என்று மாய தோற்றத்தை ஏற்படுத்துவார். கழக தோழர்கள் அவரை நம்ப வேண்டாம். எப்போதும் போல் ஜெயலலிதாவின் வெற்றிக்கு பின்னால் நான் இருப்பேன் என்று அவர் தெரிவிக்கும் கருத்து அ.தி.மு.க.வினரை மோசடி செய்கின்ற முயற்சியாகும். என் வெற்றிக்கு பின்னால் எப்போதும் மக்கள் தான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

அவரிடம் அ.தி.மு.க.வினரும்,தலைவர்களும் தோழமைகட்சியினரும் மற்றவர்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கடந்த 2011 சட்டபேரவை தேர்தலுக்கு முன் சசிகலா நடராஜனைப்பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நடராஜனுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, சம்மந்தமும் இல்லை. நான் அவரை பார்த்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரை ஒதுக்கியே வைத்துள்ளேன்.  என்னை அவர் பார்க்க முடியாது.  பேசவும் முடியாது.

என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா காரசாரமாக நடராஜனை வெளுத்து வாங்கினார்.

அதை அ.தி.மு.க.வினர் முழுவதுமாக ஏற்றார்களா என்றால் இல்லை என டக்கென்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு தேர்தலின் போதும் நடராஜனின் பெசண்ட் நகர் பங்களாவில் அ.தி.மு.க.வில் போட்டியிட சீட்டுகேட்போர் குவிவார்கள். நடராஜன் யாருக்கு சீட்டு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாரோ அந்த பட்டியலை சசிகலாவுக்கு ரகசியமாக அனுப்பிவைப்பார். அந்த லிஸ்ட் செலக்ட்டும் ஆகிவிடும்.

ஆக ஜெயலலிதாவின் முகத்துக்கு நேரே தன் கணவரிடம் தொடர்பில்லை நான் உங்க தோழி அக்கா. நீங்க விரட்டியவரிடம் நான் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்று சொல்லிய சசிகலா, மறைமுகமாக அனைத்து விஷயங்களையும் நிறைவேற்றிக்கொண்டார் என்கிறார்கள்.

ஒருவகையில் இதுவே அம்மாவுக்கு இந்த சசிகலா செய்த துரோகம் இல்லையா.

அப்படி குறுக்கு சால் ஓட்டி பதவிக்கு வந்தவர்கள் குரூப் சேர்ந்துக்கொண்டு சசிகலாவுக்கு துதி பாடுகிறார்கள். 1998 தேர்தலில் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அ.தி.மு.க.பிளவுபட்ட போது ஜானகி பக்கம் நிர்வாகிகள் இருந்தனர்.

ஆனால், ஜெயலலிதாவின் பக்கம் தொண்டர்களும் மக்களும் இருந்தனர்.
அதன் காரணத்தால்தான் ஜெயலலிதா வெற்றிக்கனியை பறித்தார்.
முதல்வராகவே மறைந்தார்.

ஜெவின் அறிக்கையை மீறி நடராஜனுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு சீட்டு பெற்ற நிர்வாகிகள் வேண்டுமானால் சசி கும்பலுக்கு ஜால்ரா போடலாம். ஆனால் அ.தி.மு.க.தொண்டர்களும் பொதுமக்களும் என்ன விரும்புகிறார்கள் என்பதை இந்த நாடே அறியுமே.

2011ஜெ.,வெளியிட்ட அறிக்கை பிரசுரமானதை இந்த செய்தியோடு இணைத்துள்ளோம் வாசித்து பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்